science

img

பசிபிக் பெருங்கடலில் விஷவாயுவை சுவாசித்து உயிர் வாழும் நுண்ணுயிர்கள்!

பசிபிக் பெருங்கடலில் மிக குறைந்த அளவே ஆக்ஸிஜன் இருக்கும் பகுதியில், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்ட போது ’ஆர்சனிக்’ என்ற மிகவும் கொடிய விஷவாயுவை சுவாசித்து நுண்ணுயிர்கள் உயிர் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது.

வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள், பசிபிக் பெருங்கடலில் மிக குறைந்த அளவே ஆக்ஸிஜன் இருக்கும் பகுதியில் உயிரிணங்கள் எப்படி வாழ்கின்றன என்பதை குறித்த ஆய்வை மேற்கொண்டனர். இதற்காக கடந்த 2012-ஆம் ஆண்டில் மெக்சிகோ கடற்பகுதியில் கடல்நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வு மேற்கொண்டனர். கடல் நீர் மாதிரியில் இருந்து மரபணுவை பகுப்பாய் செய்தபோது, ’ஆர்சனிக்’ என்ற விஷவாயுவை சுவாசித்து, நுண்ணுயிர்கள் உயிர் வாழ்வது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த ஆய்வின் முடிவுகளின் படி, கடல்நீரில் 1 சதவீதத்துக்கு குறைவாகவே ஆர்சனிக் வாயுவை சுவாசிக்கும் நுண்ணுயிர்கள் வாழ்கின்றன. இந்த வகையான நுண்ணுயிர்கள், சூடான நிலையிலும், அசுத்தமாக இடங்களிலும் வாழக்கூடியவை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  


;